Polaroid
Tamil Full Movie




சந்தியாவின் காமெடி கூட்டணி


சமீபகாலமாக, தமிழில் போதுமான பட வாய்ப்பு இல்லாததால், தாய்மொழியான மலையாளத்தில் நடித்து வந்தார், “காதல்சந்தியா. அங்கே, யாரும் அவரை கதாநாயகி வேடத்துக்கு அணுகவில்லையாம். கேரக்டர் ரோல்களுக்கு மட்டுமே, பயன்படுத்தி வந்துள்ளனர்.அதனால், மீண்டும் தமிழில் பிரவேசிக்க முயற்சி எடுத்த அவருக்கு, தற்போது, “யா யா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும், கதாநாயகி வேடமில்லையாம். சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும், படத்தில் சந்தானத்தை, அவ்வப்போது கலாய்க்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், சில காட்சிகளில் சந்தியாவையும், கலாய்க்கும் விதமாக காட்சிகள் உள்ளதாம். அதனால் பதிலுக்கு சந்தியாவும், அவரை கலாய்க்கஇவர்களுக்கிடையே, ஒரே காமெடி அட்டகாசம் தானாம்.