Ring ring
Tamil Full Movie




அஜீத் படத்தை இயக்கவில்லை: ஏ.ஆர்.முருகதாஸ்


அஜீத் தற்போது பெயரிடப்படாத விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு ‘ரெட்டை தலை’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இப்படத்தில இரண்டு வேடங்களில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது: என்னுடைய இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக வெளிவந்த செய்திகளை நானும் படித்தேன். சரி நல்ல விஷயம்தானே என்று பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாமே யூகத்தின் அடிப்படையிலான செய்திகள்தானே தவிர உண்மையில்லை.

அஜீத்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அவருக்கும் உண்டு. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது சேர்ந்து பணியாற்றுவோம்.

நான் இப்போது ‘துப்பாக்கி’ இந்தி ரீமேக்கில் பிசியாக இருக்கிறேன். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். இதற்கே எனக்கு ஒரு வருடம் ஆகிவிடும்,

பொதுவாக நான் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படங்கள்தான் இயக்குகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை மாற்றும் வகையில் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. கமல் சாரை வைத்து உலக தரத்தில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு என்றார்.