Tamil Full Movie




மீண்டும் கோபிகா


“ஆட்டோகிராப்” மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கோபிகா. அதன் பிறகு கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, அரண், எம் மகன், வீராப்பு ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக நடித்த படம் வெள்ளித்திரை. தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்திருந்த கோபிகா மலையாளத்தில் “வெர்தே ஒரு பார்ய” என்ற படத்தில் கடைசியாக நடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு 2008ம் ஆண்டு அகிலேஷ் என்ற வெளிநாட்டு டாக்டரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் வடக்கு அயர்லாந்தில் குடியேறினார். இடையில் பாதியில் நின்ற ஒரு மலையாளப் படத்தை முடித்துக் கொடுத்தார். ஒரே ஒரு விளம்பரத்தில் மட்டும் நடித்தார். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார்.

மலையாள நடிகைகளின் ஜாதகப்படி 5 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா. அவர் நடிக்கப்போகும் முதல் மலையாளப்படம் “பார்ய அத்தர போரா”. இதில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். அக்கு அக்பர் இயக்குகிறார். இதற்கான ஒப்பந்தத்தில் கோபிகா கையெழுத்திட்டு விட்டார். அடுத்த வாரம் திருச்சூரில் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. விரைவில் தமிழிலும் நடிக்க இருக்கிறார் கோபிகா. இதுபற்றி சென்னையில் உள்ள தனது மானேஜருக்கு தகவல் அனுப்பி இருக்கிறார். மெச்சூர்டான கேரக்டராக இருந்தால் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போது அயர்லாந்தில் குடியிருந்தாலும், அதிக பட வாய்ப்புகள் கிடைத்தால் சென்னை அல்லது கொச்சியில் குடியேறுவார் என்று தெரிகிறது.




Polaroid