XtGem Forum catalog
Tamil Full Movie




சென்னை: என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல்கல்லாக அமையும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

படத்தை முழுவதுமாக நேற்று பார்த்த பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினியின் சார்பில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு:

ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மென்ட் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தான் 'கோச்சடையான்'.

rajini praises soundarya kochadaiyaan making


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார்,தீபிகா படுகோன், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா,ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் 19 ஆம் தேதியன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் துவங்கி 25 நாட்கள் நடைபெற்றது.

பிறகு ஏப்ரல்,மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து அத்துடன் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்தது.ஜேம்ஸ்பாண்ட், ஹாரிபாட்டர், அயன் மேன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்த லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஆங்கில படங்களான "அவதார்", "டின் டின்" ஆகிய படங்களில் கையாண்ட மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலை-வேலு,
நடனம்-சரோஜ்கான், சின்னிபிரகாஷ், ராஜுசுந்தரம்,
உடைகள் வடிவமைப்பு - நீத்தா லுல்லா,
சண்டைபயிற்சி - மிராக்கிள் மைக்கேல்,
படத்தொகுப்பு - ஆன்டனி,
ஒலிப்பதிவு - ரஸுல் பூக்குட்டி,
தயாரிப்பு மேற்பார்வை - உதயக்குமார்,
பாடல்கள் - கவிஞர் வாலி , கவியரசு வைரமுத்து ,
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - ஆர். மாதேஷ் ,

இசை - இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான்,
கதை திரைக்கதை வசனம் - கேஎஸ் ரவிக்குமார் ,
இயக்கம் - சௌந்தர்யா ஆர் அஷ்வின் .

கடந்த சில மாதங்களாக லண்டன், சென்னை ஆகிய இடங்களில் கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரோடக்க்ஷன் பணிகள் நடைபெற்று முடிந்தது.

இன்று காலை "கோச்சடையான்" முழுப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கதாசிரியர் கேஎஸ் ரவிக்குமார் இருவரும் பார்த்து விட்டு வியந்த வண்ணம் உள்ளனர்.

நினைத்ததை விட பத்து மடங்கு பிரமாண்டம்

கோச்சடையான் படத்தின் கதாசிரியரான கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் கூறுகையில், "நான் நினைத்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக வந்துள்ளது" என்றார்.

ரஜினி பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு, "என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் , மிக பிரமாதமாக வந்திருக்கிறது," என்று தன் மகளும் கோச்சடையான் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ஆர் அஷ்வினை வெகுவாக பாராட்டினார்.

தமிழ், தெலுங்கு , இந்தி ஆங்கிலம், ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளான டப்பிங், ரீரிகார்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் , ஆகிய பணிகளை மார்ச் மாதம் 15ஆம் தேதி துவங்கி ஒரே நேரத்தில் மூன்று பிரிவுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர் .

கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடை பெற்று வருகிறது.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.