Pair of Vintage Old School Fru
Tamil Full Movie




குமுதா ஹாப்பி... குமுதா ஹாப்பி... என்று குமுதாவை மட்டும் ஹாப்பி ஆக்காமல் நகைச்சுவை எனும் சரக்கை ஊற்றி சைட்டிஷ்-ஆக மெசேஜையும் தந்து நம்மளையும் ஒரு வழி ஆக்காமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டு விளையாடி இருக்கிறார்கள் இந்த பாலகுமாரர்கள்...

படத்தின் ஆரம்பமே சிக்னலில் விஜய் சேதுபதி, பாலா இருவரையும் காட்டி பின்னணி குரலில் இவர்களை பற்றிய கதைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று சொல்லும்போது பக்கத்தில் இன்னொரு பைக் வந்து நிற்கிறது அது யார் என்று பார்த்தால் பட்டி பாபு, பெயிண்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர் வர இவங்கள பத்தியும் தான் நாம பார்க்கபோறோம் என சொல்லும்போது அட வித்யாசமா இருக்கே என கிரீன் சிக்னல் காட்டி படத்தை கதையை தொடங்குகிறார்கள்.  சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி (எங்க பாஸ் புடிச்சீங்க இந்த பேர) ஏரியாவிலேயே செம கெத்து, ’தல’க்கு எப்பவுமே சரக்கு அடிச்சுட்டு பிரச்சனை பண்ணணும் இல்லைன்னா பிரச்சனை பண்ணிட்டு சரக்கு அடிக்கணும். அப்படியும் இல்லைன்னா  குமுதா பேமிலியோட பிரச்சனை பண்ணணும்... இதுதான் சுமார் மூஞ்சி குமாரோட ஃபுல் டைம் ஜாப்...

ஆமா யார் இந்த குமுதா (நந்திதா)... குமுதா தான் குமாரோட எதிர் வீட்டு டாவு... 6வது படிக்கும் விஜய்சேதுபதி 8வது படிக்கும் நந்திதாவை லவ் பண்ண ஸ்டார்ட் பன்றாரு என்னடா இங்க மறுபடியும் வயசு பிரச்சனை வருதேன்னு பாத்தா அதுக்கும் நம்ம ஹீரோ ஒரு விளக்கம் தர்றாரு, எஜுகேஷன்ல தான் நாம வீக்கு வயசு எல்லாம் ஒரு பிரச்சனை இல்லன்னு சொல்லும் போது இவர் அல்கஞ்சாரா குல்கா பார்ட்டின்னு தோணுது...

அண்ணாச்சியாக பசுபதி சிறு இடைவெளிக்குப்பின் திரையில் பார்க்கும்போது ஏன்யா சினிமாவை விட்டு விலகி விலகி போறன்னு கேள்வி கேட்க வைக்கிறார். நந்திதாவை காதல் டார்ச்சரில் துரத்தும் விஜய்சேதுபதியை அடக்க குமுதாவின் அப்பா பஞ்சாயத்தை பசுபதி வரைக்கும் கொண்டு போகிறார். முதல் பாதி முழுவதும் குமாரிடம் சிக்கிக் கொண்டு அவர் படும் அவஸ்தை ரசிக்க வைக்கிறது. இவன் எவ்ளோ சொல்லியும் கேட்கமாட்றானேன்னு ஒரு கட்டத்தில் விஜயை தர்ம அடி கொடுத்து அனுப்புகிறார்கள் பசுபதி கோஷ்டிகள். பஞ்சாயத்து நடக்கும் ஒயின்ஷாப்பில் ஒரு கொலை நடக்கிறது, அந்த கொலையை வைத்து இன்னொரு கிளை கதை. பட்டி பாபு, பெயிண்டர் ராஜேந்திரன்  கொலையும் அதற்கு அவர்கள் செய்யும் அலம்பலும் நகைச்சுவையாக உள்ளது.

பாலாவாக வரும் அஸ்வின், காதலி ரேணுவிடம் இனி குடிக்க மாட்டேன் என சத்தியம் இட்டு மறுநாளே மாட்டிக்கொண்டு முழிக்கும்போது . இந்த காலத்து இளைஞர்களை அக்மார்க்காக பிரதிபலிக்கிறார், கூடவே அஸ்வினின் அலுவலக M.D.ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அவருக்கு ஒரு பட்டபெயர் வைத்து அவரிடமே மாட்டிக்கொண்டு சிக்கும்போது நமக்கு பரிதாபத்தை ஏற்படுகிறது. இவர்களின் காதல் கதையையும் சேர்த்தால் மூன்று சிறுகதைகள், இதில் குமாரின் செல்போன் பெயிண்டர் ராஜேந்திரனிடம் சிக்கிக்கொள்கிறது இவர்கள் செய்த கொலைக்கும், கள்ளக்காதலுக்கும் இந்த செல்போனையே உபயோகிக்கிறார்கள். பாலா குடித்துவிட்டு பைக் ஓட்டும்போது, எதிரே வந்த பெண்ணின் மீது மோத அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் புலம்பும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். மற்றபடி சலித்து துவைத்துப்போன காட்சிகளை வைத்து ஓட்டியிருக்கிறார்கள். அடிப்பட்ட பெண்ணை காப்பாற்ற அரிய வகை ரத்தம் தேவைப்படுகிறது என டாக்டர்கள் சொல்ல. அந்த அரிய வகை ரத்தம் குமாருக்கு மட்டும் இருப்பது தெரிகிறது. பாலாவும் அவன் நண்பர்களும் குமாரை தேடி படையெடுக்க குமார் கிடைத்தானா, குமாருக்கு செல்போன் கிடைத்ததா, பாலா அந்த பெண்ணை காப்பாற்றினானா என்பது இடைவெளிக்குப் பின் நடக்கும் சம்பவங்கள்.

இடைவெளி வரை சுமார் மூஞ்சியாக இருந்த குமாரை, இடைவெளிக்குப்பின் அடித்து துவைத்து சுமார் மூஞ்சி கூட இல்லாத குமாராக மாற்றி ரத்த காயங்களுடனும் கிழிந்த சட்டையுடனும் கிளைமாக்ஸ் வரை கெத்து காட்டவைத்திருக்கிறார்கள் (நீ உண்மையிலேயே ஏரியால பெரிய கெத்து மச்சி).

பரோட்டா சூரி வந்ததும் படம் டாப் கியரில் எகிரும் என்று பார்த்தால் படம் அப்படியே இரண்டாவது கியருக்கு தாவுகிறது. ஆனால் கள்ளக்காதல் கூட்டணியைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொடுக்கப்போவதே சூரிதான் என்று எதிர்பார்க்கும்போது நடக்கும் திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், சூரி வரும் காட்சிகள் வலிந்து சேர்க்கப்பட்டதாகவே தெரிகிறது இது படத்தில் ஒட்டவும் இல்லை, ரசிக்கும்படியாகவும் இல்லை.

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவும், வசனமும் குறிப்பாக  “ஒருத்தனை பைத்தியகாரன் ஆக்கனும்னா ஒன்னு அவன் மார்க்கெட்டிங்ல வேலை பார்க்கணும் இல்ல லவ் பண்ணனும். நான் ரெண்டுமே பண்றேன்”... இதுபோலப் பல வசனங்களில் மதன் கார்க்கி,கோகுல் கூட்டணி பிரகாசிக்கிறது. பாடல்கள் பெரிதாக சொல்லும்படி இல்லையென்றாலும் “ப்ரேயர் சாங் மற்றும் டாவு டாவு சாங்கும்” இளைஞர்களை கொஞ்ச காலத்துக்கு ஆட்டம் போட வைக்கும்.

இயக்குநர் கோகுல் தன்னுடைய முதல் படத்தில் ரௌத்திரமாக படையெடுத்து, பின் அடிவாங்கி இந்த படத்தின் வெற்றி மூலம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, என்று நம்மை பாராட்ட வைத்திருக்கிறார்...