80s toys - Atari. I still have
Tamil Full Movie




அழகு தேவதை நயன்தாராவிற்கு இப்பொழுது நியூமராலஜியில் அதிக நம்பிக்கை வந்துள்ளதாம். பெயரில் 9 இருந்தாலும் அவரது அதிர்ஷ்ட எண் 5ஆம். முன்பு சிம்புவுடனும், பிரபுதேவாவுடனும் பரபரப்பாக செய்திகளில் வலம் வந்த நயன்தாரா, பின்பு இருவராலுமே அதிக மனக்கஷ்டத்திற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே.வாழ்க்கையில் துன்பம் வரும் வேளையில் , மனிதர்களுக்கு ஜோசியம் மீது அதீத நம்பிக்கை வருவது சகஜமே. நயன்தாராவும் அதற்கு விதி விலக்கல்ல… தற்போது, நியூமராலஜியில் அதிக நம்பிக்கை பிறந்துள்ளதாம் நயனதாராவுக்கு. அவரது அதிர்ஷ்ட எண் 5 ஆம். இதையடுத்து தனது வண்டியின் பதிவு எண்களாக 5ன் கூட்டுத்தொகை வருமாறு பார்த்துக்கொள்கிறாராம். பொதுவாக, நியூமராலஜியில் 5ம் எண் என்பது வெற்றியின் எண்ணாக சொல்லப்பட்டாலும், கொந்தளிப்பையும், ஏற்ற இறக்கத்தையும் தரும் குணமும் அந்த எண்ணிற்கு உண்டாம். நயனதாராவுக்கு என்ன கொந்தளிப்பு ஏற்படப் போகிறதோ….