Lamborghini Huracán LP 610-4 t
Tamil Full Movie




அரசியல்வாதி பதுக்கிய கறுப்பு பணத்தை மீட்கும் இளைஞன் கதை.

நாயகனான சத்யா, வேலை பார்க்கும் நண்பர்கள் சஞ்சய் பாரதி, விக்னேசுடன் திருவல்லிக்கேணி மேன்சனில் தங்கி படிக்கிறார். சத்யாவுக்கும் டி.வி. நிருபர் ராகுல் பிரீத்துக்கும் மோதல் உருவாகி காதலாக மலர்கிறது.

ஊழல் வழக்கில் சிக்கும் அரசியல்வாதி சுரேஷ், கவுன்சிலர் சந்தான பாரதிக்கு எதிராக செய்தி வெளியிட்டு அவர்கள் பகைக்கு ஆளாகிறார் ராகுல் பிரீத். ஒரு கட்டத்தில் நூலகத்தில் உள்ள புத்தகம் ஒன்று சத்யா கைக்கு கிடைக்கிறது. அதில் சுரேஷ் சுடுகாட்டில் மறைத்து வைத்த பலகோடி ரூபாய் பற்றிய ரகசிய குறிப்பு இருக்கிறது. அதை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தேடி மூட்டை மூட்டையாய் கறுப்பு பணத்தை சத்யாவும் நண்பர்களும் கண்டெடுக்கின்றனர்.

அந்த பணத்தை ஜெகபதி பாபு உதவியோடு கைப்பற்ற சுரேஷ் முயற்சிக்கிறார். சத்யாவிடம் பணம் இருப்பதை கண்டுபிடித்து துரத்துகின்றனர். இதனால் நண்பர்களை ஆபத்து சூழ்கிறது. அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா என்பது மீதி கதை…

காதல் காமெடியில் திகிலை கோர்த்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் விஜய் ஆதிராஜ். சத்யா கேரக்டரில் நேர்த்தி. ராகுல் பிரீத்துக்கும் இவருக்குமான மோதலும், காதலும் சுவாரஸ்யம். கஷ்டப்பட்டு பணம் புரட்டி அடிப்பட்ட நண்பன் தாயை காப்பாற்றும் சென்டிமென்ட் அழுத்தம்.

ராகுல் பிரீத் அரசியல்வாதிகளுடன் மோதும் வலுவான நிருபர் வேடத்தை கஷ்டப்பட்டு சுமக்கிறார். காதலில் ஓ.கே. சஞ்சய் பாரதி, விக்னேஷ், மனோபாலா கலகலப்பூட்டுகின்றனர். முதல் பகுதி கதையில் தொய்வு இருந்தாலும் பிற்பகுதி வேகம் பிடிக்கிறது. சுரேஷ், சந்தான பாரதி அரசியல் வில்லத்தனம் காட்டுகின்றனர். ஜேம்ஸ் வசந்தின் பின்னணி இசை கதையுடன் ஒன்ற வைக்கிறது. லட்சுமண் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.