Disneyland 1972 Love the old s
Tamil Full Movie




இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, நடிகர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்காக அஜீத்தின் புதிய பட விழா தள்ளிபோய் உள்ளது. நடிகர் அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத (தற்காலிக பெயர் வலை) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்க உள்ளார். தமன்னா, அஜீத்துடன் ஜோடி சேருகிறார். இப்படத்தை விஜயா புரொடக்ஷ்ன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் துவக்க விழா ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று ஐதராபாத் நகரில் துவங்க இருந்தது. ஆனால் ஏப்ரல் 2ம் தேதி இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அஜீத் அப்போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் இப்படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து படத்தின் துவக்க விழாவையும், அதை தொடர்ந்து நடக்க உள்ள படப்பிடிப்பையும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் அஜீத்.